பிரபல பைனான்சியர் வெட்டிப்படுகொலை - பதற்றத்தில் வேளாங்கண்ணி!
பிரபல பைனான்சியரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிவிஆர் மனோகர்
வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டிவிஆர் மனோகர். இவர் அங்கு பைனான்சியராகவும், தங்கும் விடுதி ஒன்றின் உரிமையாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு டிவிஆர் மனோகர் தனது அலுவலகத்தில் நண்பர் மணிவேலுவுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் டிவிஆர் மனோகரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலை, கழுத்து என்று சரமாரியாக வெட்டி இருக்கிறார்கள்.
வெட்டி படுகொலை
மணிவேல் இதை தடுக்க முயற்சித்து இருக்கிறார். அப்போது அவரது கையையும் அறிவாளால் வெட்டி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்து விரைந்த நாகை எஸ்பி ஜவகர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் விசாரணையில், முன்விரோதமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, டிவிஆர் மனோகரனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிவேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும்
கிராம மக்கள் நள்ளிரவில் நாகை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஏஎஸ்பி சுகுமார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.