தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக
tvk won dharapuram, madhurandagam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது.
தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக வெற்றி
அக்டோபர் 6 ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், 2 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
தாராபுரத்தில், தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளுடன் 2வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா 5,268 வாக்குகளுடன் 4வது இடத்திலும், சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் 1,157 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 70,884 வாக்குகள் பெற்று, 18 ,248 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் பரந்தாமன்48,516 வாக்குகளுடன் 2வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 43,233 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் ஜானகி ராமன் 2,064 வாக்குகளுடன் 4வது இடத்திலும், சிபிஎம் வேட்பாளர் சுகந்தி 1,525 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
இதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு மோசடி! குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை IBC Tamil
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan