4 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்த தவெக - அமைச்சரை வீழ்த்திய ஸ்ரீநாத்

Thoothukudi Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja May 04, 2026 09:21 AM GMT
Report

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 107 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. 

5 தொகுதிகளில் தவெக வெற்றி

திமுக 66 தொகுதிகளிலும், அதிமுக 61 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சில தொகுதிகளில் ஏறத்தாழ வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. தஞ்சாவூர், மதுரை தெற்கு, தாம்பரம், கோபி செட்டிபாளையம் மற்றும் தூத்துக்குடியில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

4 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்த தவெக - அமைச்சரை வீழ்த்திய ஸ்ரீநாத் | Tvk Won 5 Seat Sreenath Beat Minsiter Geethajeevan

தூத்துக்குடியில், தவெக சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத், எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவனை விட சுமார் 30000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.