ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவிற்கு அமைச்சர் பதவி இல்லை ஏன்?

Tamil nadu
By Manchu May 22, 2026 01:26 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்த தவெக வி.எஸ்.பாபுவிற்கு அமைச்சர் பதவி கிடைக்காதது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்ட மன்ற தேர்தல் 2026ல் நடிகர் விஜய் தவெக கட்சி தலைவராக இருந்ததுடன், 108 தொகுதிகளை வென்றுள்ளார்.

இவர் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் சில இடங்கள் தேவைப்பட்ட நிலையில், சில கட்சிகளை கூட்டணியாக வைத்து முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற போது, இன்னும் 9 பேர் அமைச்சராக பதவியேற்றனர். இந்நிலையில் நேற்றைய தினத்தில் அமைச்சர் பதவி விரிவாக்கம் நடைபெற்றது.

ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவிற்கு அமைச்சர் பதவி இல்லை ஏன்? | Tvk Vs Babu Defeat Mk Stalin No Place Cabinet

ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு

இதில் 21 தவெக கட்சியின் வேட்பாளர்கள் அமைச்சராக்கப்பட்ட நிலையில், 2 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து அமைச்சர் ஆக்கப்பட்டனர்.

தவெக-வில் நேற்றைய தினம் 4 பெண் உறுப்பினர்கள் அமைச்சராக பதவியேற்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு அமைச்சர் பிரிவில் வராதது கேள்வி எழுந்துள்ளது.

வி.எஸ்.பாபு ஸ்டாலினை 8,795 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அதிமுக வேட்பாளரை 69, 992 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவிற்கு அமைச்சர் பதவி இல்லை ஏன்? | Tvk Vs Babu Defeat Mk Stalin No Place Cabinet