திருச்சி கிழக்கு, பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வெற்றி
Vijay
Thamizhaga Vetri Kazhagam
Tamil Nadu Election 2026
By Karthikraja
தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூரில் வெற்றி பெற்றுள்ளார்.
விஜய் வெற்றி
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக்கழகம் 106 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 76 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 52 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டார். இதில் பெரம்பூர் தொகுதியில் விஜய் 1,00,582 வாக்குகள் பெற்றுள்ளார்.
44,583 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் 26,432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.