வாசலில் விசில் கோலமிட்ட விஜய் - வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

Vijay Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja Apr 17, 2026 02:39 PM GMT
Report

 தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

விசில் கோலமிட்ட விஜய்

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், விசில் சின்னத்தை தங்கள் வீட்டு வாசலில் கோலமாக வரைந்து ஆதரவு தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து, தவெக தொண்டர்கள் பலரும் தங்களது வீடுகளில் விசில் சின்னத்தை கோலமாக வரைந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.

வாசலில் விசில் கோலமிட்ட விஜய் - வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு | Tvk Vijay Went Door To Door Canvas In Perambur

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.   

பெரம்பூரில் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள தவெக தேர்தல் பணிமனைக்கு சென்ற விஜய், வாசலில் விசில் கோலமிட்டார்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

அதன் பின்னர் அந்த பகுதியில், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.  

வாசலில் விசில் கோலமிட்ட விஜய் - வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு | Tvk Vijay Went Door To Door Canvas In Perambur

விஜய்யை மக்கள் எளிதில் அணுக முடியாது என எதிரிக்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.