ஜோசப் விஜய் என்னும் நான்.. முதல்வராக பதவியேற்கும் தேதி, இடம் குறித்த தகவல்
தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ள தேதி மற்றும் இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வராக பதவியேற்க உள்ள விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் தவெக தலைவர் விஜய் தலைமையில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தவெகவின் சட்டமன்ற தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நாளை காலை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகராய் சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய் கோரிக்கை உள்ளார்.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள்(மே 7) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து பதவியேற்கும் விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களின் படங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ள நிலையில், தலைமை செயலகத்தில் டிஜிபி, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.