கரூர் துயரத்திற்கு பின்னர் நாளை மக்களை சந்திக்கும் விஜய் - எங்கே தெரியுமா?
தவெக தலைவர் விஜய், கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் முதல்முறையாக நாளை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள உள்ளார்.
விஜய் மக்கள் சந்திப்பு
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்படும் தவெக தலைவர் விஜய், மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 2 மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கோண்டார்.

செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய் சில காலத்திற்கு அரசியல் பணிகளையும் மேற்கொள்ளாமல் இருந்தார்.
தற்போது, ஆர்ப்பாட்டம் அறிக்கை என அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், மீண்டும் நாளை முதல் மக்கள் சந்திப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
யாருக்கெல்லாம் அனுமதி?
நாளை காலை 11 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை விஜய் சந்தித்து பேச உள்ளார்.

இது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
— TVK Party HQ (@TVKPartyHQ) November 22, 2025
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00…
நுழைவுச் சீட்டு இல்லாத தொண்டர்கள் அத்துமீறி உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில், கல்லூரி வளாகத்தை சுற்றி தகர சீட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.