பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள் - அரசுக்கு விஜய் சொன்ன யோசனை

Vijay Tamil nadu Government of Tamil Nadu Thamizhaga Vetri Kazhagam Women
By Karthikraja Nov 25, 2024 06:01 AM GMT
Report

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் இன்று(25.11.2024) கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் பெண்கள் பாதுகாப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

vijay talks about women safety

 அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. 

விஜய் போட்டியிட உள்ள தொகுதி இதுதான்; விஜய்யே சொன்னாராம் - தவெக நிர்வாகி தகவல்

விஜய் போட்டியிட உள்ள தொகுதி இதுதான்; விஜய்யே சொன்னாராம் - தவெக நிர்வாகி தகவல்

தனி இணையதளம்

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

vijay talks about women safety

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.