விஜய் தோல்வி என பரவிய வதந்தி - தவெக ஆதரவாளர் எடுத்த விபரீத முடிவு

Vijay Krishnagiri Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja May 04, 2026 05:15 AM GMT
Report

விஜய் தோல்வியடைவார் என வதந்தி பரவிய நிலையில், தவெக தொண்டர் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

234 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 

விஜய் தோல்வி என பரவிய வதந்தி - தவெக ஆதரவாளர் எடுத்த விபரீத முடிவு | Tvk Vijay Supporter Slits Throat Over Loss Rumour

3 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 102 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

கிருஷ்னகிரியை சேர்ந்த 28 வயதான மகேந்திரன் என்பவர், தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இதனிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே தவெக தலைவர் விஜய் தோல்வியடைவார் என வதந்தி பரவிய நிலையில், மன உளைச்சலில் மகேந்திரன் தனது தொண்டையை அறுத்துக்கொண்டுள்ளார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.