இனிமேல் நீங்கள் யாரும் ரசிகர்கள் இல்லை - வீடியோவில் பேசிய விஜய்
தவெகவின் சோஷியல் மீடியா படையை தான் இந்தியாவிலேயே மிகப்பெரும் படையாக சொல்கிறார்கள் என விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தவெக ஐடி விங் கூட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்துள்ள விஜய், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், கட்சிப்பணிகளை முடக்கி விட்டுள்ளார்.
இதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் இன்று, தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் வீடியோ மூலம் தோன்றி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
விஜய் பேச்சு
இதில் பேசிய விஜய், "எல்லாருக்கும் ஹாய், இந்த மீட்டிங் நடக்கும்போதே லைவ்வா வீடியோ கால்ல வந்து பேசணும்னு நினைச்சேன். நெட்வொர்க் பிரச்னையினால அதை செய்ய முடியல. அதனாலதான் இந்த ரெக்கார்டட் மெசேஜ். உங்க எல்லாரையும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம்.
நம்முடைய இந்த சோஷியல் மீடியா படையை தான் இந்தியாவிலேயே மிகப்பெரும் படையாக சொல்கிறார்கள். இதனை நம்ம சொல்கிறதை விட மற்றவங்களே பார்த்து சொல்றாங்க.
Thalapathy addressed the cadre members through video call at #TVK IT Wing Meeting! #VirtualWarriors
— TVK IT Wing (@Actor_Vijay) April 19, 2025
pic.twitter.com/KV4vNRN2r6
இனிமேல் நீங்க எல்லாரும் சோஷியல் மீடியா ரசிகர்கள் மட்டும் கிடையாது. என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் எல்லாரும் நம் கட்சியுனுடைய virtual warriors.. இப்படித்தான் உங்கள் எல்லாரையும் கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
தவெகவின் ஐடி விங் என்று சொன்னாலே, கண்ணியத்தோடு நடந்துகொள்பவர்கள் என்று எல்லாரும் சொல்ல வேண்டும். அதை மனதில் வைத்து வேலையை பாருங்கள். உங்கள் எல்லாரையும் கூடிய விரைவில் நேரில் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி" என கூறினார்.