தவெக விஜய் 220 கோடி சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா - ரசிகர்கள் பெருமிதம்

Vijay Election JanaNayagan Salary TVK
By Vinoja May 03, 2026 12:16 PM GMT
Report

ஜனநாயனாயன் திரைப்படத்துக்கான தான் பெற்ற பெரும் தொகை சம்பளப்பணத்தை மொத்தமாக நடிகரும் தவெக தெவைலருமான விஜய் திருப்பிக்கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றதுடன் எதிர்வரும் மே 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

தவெக விஜய் 220 கோடி சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா - ரசிகர்கள் பெருமிதம் | Tvk Vijay Returned His Salary To Jananayagan

இந்நிலையில், நடிகர் மற்றும் தவெக தலைவரின் இறுதி படமான ஜனநாயனன் திரைப்படம் ஜனவரி 9ம் திகதி திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் யாரும் எதிர்பாரத வகையில் ஏப்ரல் மாதம் ஆன்லைனில் கசிந்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஜனநாயகன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

ஆனால் ஆன்லைன் கசிவால் ஜனநாயகன் பட பிசினஸ் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து தன் கடைசி படத்தில் நடிக்க கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சம்பளமாக வாங்கிய ரூ. 220 கோடியை விஜய் திருப்பிக் கொடுத்திருக்கிறாரார் என்ற தகவல் இணையத்தில் பரவிவருகின்றது.

இது குறித்து பிரபல நடிகை அம்பிகா தனது டுவீட்டில் தயாரிப்பாளரிடம் சம்பளத்தை திருப்பிக் கொடுத்துட்டார் விஜய் என்று கேள்விப்படுகிறேன். அது உண்மை எனில் சிறந்த செயல் என பாராட்டியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.