நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த தவெக தலைவர் விஜய்

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Apr 14, 2026 02:05 PM GMT
Report

திருப்பூர் சென்ற தவெக தலைவர் விஜய், தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, நெசவாளர்கள், விவசாயிகள் மற்றும் காவல்துறையினர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

நெசவாளர்களுக்கான வாக்குறுதிகள்

இதில் பேசிய அவர், "தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 16 ஆம் திகதி வெளியிட உள்ளேன். அதற்கு முன்னர் இங்கு சில வாக்குறுதிகளை அளிக்கிறேன். 

நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த தவெக தலைவர் விஜய் | Tvk Vijay Promises For Weavers In In Tiruppur

நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்காக அரசுக்கு சொந்தமான ஒரு உலகாளவிய இ கார்மஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.

கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.30,000 வங்கிகளில் செலுத்தப்படும்.

கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1,500 யூனிட்டாக உயர்த்தப்படும்.

நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும். 

தைரியமிருந்தால் தமிழ்நாட்டை தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? முதல்வர் ஸ்டாலின் சவால்

தைரியமிருந்தால் தமிழ்நாட்டை தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? முதல்வர் ஸ்டாலின் சவால்

நெருக்கடியில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்களை பாதுகாக்க ரூ.15,000 கோடி பண்ட் உருவாக்கப்படும்.

சிறு, குறு தொழில்கள்  மூடப்படுவதற்கான காரணமான 'பீக் ஹவர்ஸ்' மின்கட்டணத்தை நிறுத்திவைப்போம்.

சிறு, குறு தொழில்களை நவீனமயமாக்க ரூ.50 லட்சம் வரை நேரடி மூலதன மானியத்தை வழங்குவோம். 

நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த தவெக தலைவர் விஜய் | Tvk Vijay Promises For Weavers In In Tiruppur

5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் பயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்களின் நலனுக்காக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

5 அல்லது அதற்கு மேற்பட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு பணியை நிறைவு செய்துள்ள அனைத்து தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தர் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்.

காவலர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.25,000ஆக தவெக அரசு உயர்த்தும். காவலர்களின் பணி நேரங்களை முறைப்படுத்துவோம்.