அரசியல் மாயாஜால கணக்குகள் மக்களால் நொறுக்கப்ட்டுள்ளது - தவெக தலைவர் விஜய்

Vijay Tamil nadu TVK
By Vinoja Apr 24, 2026 12:53 PM GMT
Report

“அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நேற்று 23 ஆம் திகதி அமைதியான முறையி்ல் நிறைவடைந்தது.மொத்தம் 234 தொகுதிகளிலும் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவு நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் குறிப்பி்ட்டுள்ளது.

அரசியல் மாயாஜால கணக்குகள் மக்களால் நொறுக்கப்ட்டுள்ளது - தவெக தலைவர் விஜய் | Tvk Vijay Post About Tamil Nadu Political History

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் குறிப்பிடுகையில், 

“அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

 அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.

85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?

அரசியல் மாயாஜால கணக்குகள் மக்களால் நொறுக்கப்ட்டுள்ளது - தவெக தலைவர் விஜய் | Tvk Vijay Post About Tamil Nadu Political History

வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.

தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும் என பதிவிட்டுட்டுள்ளார்.