தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ள விஜய் - எப்போது தெரியுமா?
தமிழக வெற்றி கழகத்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தவெக விளக்கமளித்துள்ளது.
தமிழக வெற்றி கழகம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், கட்சி கொள்கைகளை அறிவித்ததோடு, கொள்கை எதிரி, அரசியல் எதிரி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசினார்.
சுற்றுப்பயணம்
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்படும் விஜய், சமீபத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகளை நியமித்தார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தவெக அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என பேசி இருந்தார்.
இதனால் 2026 தேர்தலில் அதிமுக மற்றும் தவெக கூட்டணி அமையுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தவெக விளக்கமளித்துள்ளது.
மேலும், தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் மார்ச் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.