பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போரட்டம் - மக்களை சந்திக்க செல்லும் விஜய்
தவெக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம்
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு தொடங்கி உள்ளது.
ஆனால் விமான நிலையம் அமைக்க கூடாது என ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரில் செல்லும் விஜய்
முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விவசாயிகளை பாதிக்கும் விமான நிலைய திட்டங்கள் கூடாது என்று பரந்தூர் விமான நிலையம் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விஜய் பனையூரில் இருந்தே கொண்டே அரசியல் செய்கிறார் என அவர் மீது விமர்சனம் எழுந்தது. வெள்ள நிவாரண பொருட்களையும் பனையூருக்கு மக்களை வரவழைத்து வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, வரும் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் போராடும் மக்களை சந்திக்க அனுமதி அளிக்க கோரி காஞ்சிபுரம் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக களத்திற்கு செல்கிறார்.