தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய் - இடம், தேதி இதுதான்
தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ள இடம் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் பிரச்சாரம்
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
புதிதாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் தொடங்கும் பிரச்சாரம்
மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில், திருச்சியில் இருந்து வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில், 10 மாவட்டங்களில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
இதில் சில முக்கிய நகரங்களில் ரோட்ஷோ நடத்தவும், திறந்த வேனில் நின்றபடிபேசவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதில் திருச்சியில் 2 இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், முதலில் ஸ்ரீரங்கத்தில் இருந்து தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு காவல்துறையிடம் அனுமதி பெறும் வேலைகளை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தொடங்கி உள்ளார்.