தவெகவில் பிடிச்சா சேருங்க - விஜய் அறிவித்த உறுதிமொழிகள் என்னவெல்லாம் தெரியுமா?

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Mar 09, 2024 03:40 AM GMT
Report

தவெக உறுப்பினர்களாக இணைபவர்கள் ஏற்க வேண்டிய உறுதிமொழி வெளியிடப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் சேர்க்கை

நடிகர் விஜய் அண்மையில், அரசியல் கட்சியைத் தொடங்கினர. தொடர்ந்து பல தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

vijay tvk

 அதில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட கட்சியின் உறுதிமொழியை படியுங்கள்.

எனக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் அதுதான் - மனம் திறந்த நடிகர் விஜய்!

எனக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் அதுதான் - மனம் திறந்த நடிகர் விஜய்!

உறுதிமொழி

உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள் எனத் தெரிவித்துள்ளார். மேலும், உறுப்பினர்களாக இணைபவர்கள் ஏற்க வேண்டிய உறுதிமொழியும் வெளியாகியுள்ளது. 

தவெகவில் பிடிச்சா சேருங்க - விஜய் அறிவித்த உறுதிமொழிகள் என்னவெல்லாம் தெரியுமா? | Tvk Vijay Party Members Should Take These Oaths

  • நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
  • நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை. சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
  • சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்.