இரு தொகுதிகளிலும் விஜய்யின் வேட்புமனு ஏற்பு - எதிர்க்கும் பாமக
தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்பு ஏற்கப்பட்டதற்கு பெரம்பூரில் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் வேட்புமனு ஏற்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சும்மர் 6000க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பெரம்பூரில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனுவை ஏற்பதற்கு பாமக வேட்பாளரின் முகவர் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். .

இதில், தவெக தலைவர் விஜய் 2வது முறை வேட்புமனுவில் சொத்துக்கணக்கை அதிகரித்துள்ளார். மேலும், சொத்து வரி காட்டவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு, எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி 30 நிமிடங்கள் அவகாசம் அளித்தார்.
ஆனால் போதிய ஆதாரங்களை காட்டாத நிலையில் விஜய்யின் வேட்புமனு பெரம்பூரில் ஏற்கப்பட்டது. இதே போல், திருச்சி கிழக்கிலும் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
மேலும், கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காரைக்குடியில் போட்டியிடும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய முதல்வர் வேட்பாளர்களின் வேட்புமனுக்க ஏற்கப்பட்டுள்ளது.
வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்கப்படும் போது சொத்துவிபரங்களை சரியாக காட்டவில்லை என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில், பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது தகவல்கள் சரியாக உள்ளதாக கூறி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் வேட்புமனு நிறுத்திவைப்பு
இதே போல், கோபிச்செட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வேட்புமனுவை ஏற்க ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டையன் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும், உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞர் அளித்த சான்றிதழ்களை ஏற்கக் கூடாது எனவும் அதிமுகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதன் காரணமாக செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.