பரந்தூர் வரும் தவெக தலைவர் விஜய் ..காவல்துறை சொன்ன 4 நிபந்தனை- கிராம மக்கள் ஷாக்!
பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களைத் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று சந்திக்க உள்ளார்.
பரந்தூர்
சென்னையை ஆசியாவிலேயே முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக மாற்றவும், 20,000 ரூபாய் மதிப்பீட்டில் பாரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.அதன்படி , காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4 ஆயிரத்து 750 ஏக்கர் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
ஆகவே திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கடந்த 900 நாட்களுக்கு மேலாகக் கிராம மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை இன்று சந்திக்கிறார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், போராட்டக் குழுவினர் மற்றும் மக்களை இன்று பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார் என தெரிவித்தார். இந்நிலையில், தவெக தரப்புக்கு காவல்துறை தரப்பில் 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தவெக விஜய்
பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். சட்டம், ஒழுங்கைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மேலும் திட்டமிட்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்கவேண்டும். பொதுமக்களுக்கோ, பொதுச்சொத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.