இன்று வேலூரில் தவெக மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இன்று வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கலந்துகொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
கோடை வெயிலைச் சமாளிக்க நவீன ஏர்-கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன, பாதுகாப்புப் பணியில் 900 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கியூ-ஆர் கோட் அனுமதி சீட்டு வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தவெக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
