விஜய் போட்டியிட உள்ள தொகுதி இதுவா? தவெக திட்டம்
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ள தொகுதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் தவெக
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்ற விஷயங்களில் தீவிரம் காட்டி வருகின்றன.

முதல் தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எந்த கட்சிகளும் கூட்டணிக்கு வராத நிலையில், தவெக 234 தொகுதிகளிலும் தனித்தே களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விஜய்க்கு V சென்டிமெண்ட் உள்ளதால் V என தொடங்கும் தொடங்கும் தொகுதியிலே போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

அதன்படியே, தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடத்தினார் என கூறப்படுகிறது.
அதே போல், விக்கிரவாண்டி,வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், வேதாரண்யம் தொகுதியிலும் விஜய் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாரண்யம் கடந்த 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை அங்கு அதிகபட்சமாக 6 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது.
2011 முதல் தற்போது வரை வேதாரண்யத்தில் அதிமுக வெற்றி பெற்று வருகிறது. 2016, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார்.

2021 தேர்தலில், திமுக வேட்பாளர் வேதரத்தினத்தை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஓ.எஸ்.மணியன் தொகுதியை தக்க வைத்தார்.
இந்த தொகுதியில், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் உள்ளதால் விஜய் இந்த தொகுதியை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் இடும்பாவனம் கார்த்திக் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.