தனது ஓட்டுநர் மகனுக்கு எம்எல்ஏ சீட் - மேடையிலே கண்ணீரை துடைத்த விஜய்

Vijay Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja Mar 29, 2026 11:20 AM GMT
Report

விருகம்பாக்கத்தில் ஓட்டுநர் மகனை வேட்பாளராக அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

ஓட்டுநர் மகனுக்கு எம்எல்ஏ சீட் வழங்கிய விஜய்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். 

தனது ஓட்டுநர் மகனுக்கு எம்எல்ஏ சீட் - மேடையிலே கண்ணீரை துடைத்த விஜய் | Tvk Vijay Gives Mla Seat To His Driver Son

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

சென்னை விருகம்பாக்கத்தில் சபரிநாதன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார். 

mla seat for vijay driver son

சபரிநாதனை வேட்பாளராக அறிவித்த உடன், விஜயை கட்டி அனைத்து கண்கலங்கினார். அப்போது அருகே சபரிநாதனின் தந்தை ராஜேந்திரனும் இருந்தார்.விஜய் அவரின் கண்ணீரை துடைத்து தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

 

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன் சுமார் 30 ஆண்டுகளாக விஜய்யின் ஓட்டுநர் மற்றும் உதவியாளராக பணியாற்றி வருகிறார். விஜய் எங்கும் சென்றாலும் ராஜேந்திரன் அவரின் நிழல் போல் பின்னால் இருப்பார்.

தனது ஓட்டுநர் மகனுக்கு எம்எல்ஏ சீட் - மேடையிலே கண்ணீரை துடைத்த விஜய் | Tvk Vijay Gives Mla Seat To His Driver Son

விஜய் ராஜேந்திரனை அண்ணன் என்றே அழைப்பார். கட்சி தொடங்கிய போதே அவருக்கு பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்டிருந்தார். 

ஆனால் தனது வயது காரணமாக ராஜேந்திரன் அதை மறுக்க, அவரது மகனுக்கு விருகம்பாக்கம் மாவட்ட செயலாளர் பதவி வழங்கியுள்ளார். 

தனது ஓட்டுநர் மகனுக்கு எம்எல்ஏ சீட் - மேடையிலே கண்ணீரை துடைத்த விஜய் | Tvk Vijay Gives Mla Seat To His Driver Son

தற்போது முதலில் விருகம்பாக்கமும் விஜய் போட்டியிடும் தொகுதியாக கருதப்பட்ட நிலையில், தற்போது அங்கு சபரிநாதனை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

விருகம்பாக்கத்தில், திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ விருகை இரவி, நாம் தமிழர் சார்பில் சந்தோஷ் போட்டியிடுகின்றனர்.