வரலாற்று வெற்றி பெற்ற தவெக - பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய்

Vijay S. A. Chandrasekhar Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 04, 2026 03:10 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் பெற்றோரிடம் ஆசி வாங்கியுள்ளார்.

பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

முதல் தேர்தலிலே, தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்றது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.  

வரலாற்று வெற்றி பெற்ற தவெக - பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய் | Tvk Vijay Get Bless From Parents After Won

பெரு வாரியான வெற்றிக்கு பின்னர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்ற தவெக தலைவர் விஜய், அடையாறில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். வழி நெடுக விஜய்யை காண தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

அங்கு அவரது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் விஜய் ஆசி பெற்றுள்ளார். வீட்டின் பால்கனியில் இருந்து தொண்டர்களை நோக்கி விஜய் கை அசைத்தார்.

அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழை பெற சென்றுள்ளார்.