தென் மாவட்டங்களை கண்டுகொள்ளாத விஜய் - கூட்டணிக்கு யோசனை?
விஜய் தென் மாவட்டங்களில் போதுமான கவனத்தை செலுத்தாதது பேசுபொருளாகியுள்ளது.
விஜய்
திமுக மற்றும் அதிமுக தலைவர்களும், நிர்வாகிகளும் மாவட்ட வாரியாமல் மட்டுமல்லாமல் தொகுதி வாரியாக வார்டு வாரியாக பூத் வாரியாக பணியாற்ற தொடங்கி இருக்கின்றனர்.

ஆனால் தவெக தலைவர் விஜய் இன்னும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தைக் கூட நடத்தவில்லை.
கொங்கு மாவட்டத்தில் செங்கோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பணிகளை துரிதப்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் அடுத்ததாக தென் மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
கூட்டணி?
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தரப்பில் தவெக கூட்டணியில் இணைத்தால், நிச்சயம் சில தொகுதிகளில் வெல்ல முடியும் என்று நம்புகின்றனர்.
எனவே, பொங்கலுக்கு பின் கூட்டணி உறுதியானால், தவெகவின் அடுத்தப் பொதுக்கூட்டத்தை தென் மாவட்டங்களில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.