மதுரை மேற்கு தொகுதியில் விஜய் போட்டி? கவனம் ஈர்த்த தொகுதி!
மதுரையில் விஜய் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மேற்கு
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக முதல்வராக்கிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி என தவெகவினர், அக்கட்சியின் தலைவர் விஜய்யினுடைய படத்தோடு போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தகைய சூழலில் தான் மதுரை மேற்கு தொகுதியைச் சுட்டிக்காட்டி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளார். இவர் இந்த தொகுதியில் அடுத்தடுத்து 3 முறை வெற்றி பெற்றவர்.
விஜய் போட்டி?
2026ல் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவில் கடந்த முறை இந்த தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை திமுக வேட்பாளரை களம் இறக்க அத்தொகுதியின் பொறுப்பாளரான அமைச்சர் மூர்த்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வென்ற மதுரை மேற்கு தொகுதியில் விஜய் களம் இறங்க இருக்கிறார் என மதுரை தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
