எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது - வெகுண்டெழுந்த விஜய்

Vijay Amit Shah Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Dec 18, 2024 12:30 PM GMT
Report

அம்பேத்கர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா பேச்சு

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. 

amit shah about ambedkar

இந்த விவாதத்தின் போது ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர், என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை 7 முறை சொல்லியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என கூறினார்.

விஜய் கண்டனம்

அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 

vijay condemns amit shah about ambedkar

இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். 

அம்பேத்கர்...அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.