புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பிரசாரத்தில் விஜய்
புதுச்சேரியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய் பேசுகையில், புதுச்சேரியில் முதன்முறையாக தவெக போட்டியிடுகிறது, புதுச்சேரியில் இரண்டு கூட்டணி இருக்கும் போது நாங்கள் தனியாக வந்து என்ன செய்யப்போகிறோம் என கேள்வி எழலாம்.
திமுக- காங்கிரஸ் பெயர் அளவில் மட்டுமே, தற்போது ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கிறார்கள், தமிழகத்தை போல் குழப்பமான கூட்டணியாகவே உள்ளது.

என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி சோர்ந்து போகிற கூட்டணி, எங்களை வைத்து அவர்களாக அரசியல் நடத்தினார்கள்.
இருவரும் மத்திய ஆட்சியில் இருந்தவர்கள் தானே.. ஏன் மாநில அந்தஸ்து கொண்டு வரவில்லை, இதை கேட்டால் அரசியல் அனுபவம் இல்லை என்பார்கள்.
தவெக ஆட்சிக்கு வந்ததும் மாநில அந்தஸ்து பெற 100% முயற்சிப்போம் என தெரிவித்தார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்: உயிருடன் விமானிகளை பிடித்தால் பரிசு - ஈரான் அறிவிப்பு IBC Tamil
நெருப்புக்கு எதிராக நெருப்பு! இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை அதிர வைத்த ஈரானின் 92-வது அலை தாக்குதல் IBC Tamil