தவெக தேர்தல் பிரச்சாரம் - அறிவிப்பை வெளியிட்ட விஜய்
10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழுவை அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சட்டமன்ற தேர்தலில் முதல்முறை களம் காண உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் இளம் வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் மீண்டும் புதுச்சேரி, ஈரோடு என தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்ட விஜய் தற்போது ஜனநாயகன் பட வெளியீடு, சிபிஐ விசாரணை போன்ற காரணங்களால் பிரச்சாரத்திற்கு இடைவெளி விட்டுள்ளார்.

ஜனநாயகன் பட வெளியீட்டிற்கு பின்னர் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க உள்ள விஜய், சில கட்சிகளை கூட்டணியில் இணைத்து மேடையேற்றவும், கட்சி சின்னத்தை அறிவிக்கவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரச்சார குழு
இந்த சூழலில், மாநில, மாவட்ட அளவில் பிரச்சார பணிகளை மேற்கொள்ளும் வகையில், 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழுவை தவெக தலைவர் விஜய் அமைத்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) January 16, 2026
இந்த குழுவில், பொதுச் செயலாளர் என் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.