அதிமுகவுடன் தவெக கூட்டணி? உறுதியான தகவல்!
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி
சென்னை பனையூரில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் தவெக நிர்வாகி நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“முதல் நிர்வாகக்குழு கூட்டம் இன்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட அன்று, மக்களை சந்திக்க கரூருக்கு வெளியே காத்திருந்தோம்.
தவெக நிர்வாகி தகவல்
எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. நிர்வாகிகளை தாக்கி வெளியேற்றி விட்டார்கள். ஆகவே கரூருக்கு த.வெ.க நிர்வாகிகள் யாருமே செல்லவில்லை. த.வெ.க.வினர் கூட்டம் கட்டுப்பாடற்ற கூட்டமா? அப்போ காவல்துறை எதற்கு இருக்காங்க?

அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்று செந்தில் பாலாஜி ஒப்புக்கொள்கிறாரா? கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் மாற்றமில்லை. விஜய்யின் பிரசார பயணம் விரைவில் தொடரும். அனுமதிக்காக காத்திருக்கிறோம். எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம்.
விஜய்யின் ஆறுதல் சந்திப்பு தனிப்பட்டது. அரசியலாக்க விரும்பவில்லை. தவெகவின் கூட்டணி நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைப்பாட்டில்தான் இப்போதும் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.