விஜய்யே கூட்டணிக்கு வந்தாலும் முதல்வர் வேட்பாளர் அவர்தான்.. கெளதமி தகவல்
யார் வந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என கெளதமி தெரிவித்துள்ளார்.
தவெகவுடன் கூட்டணி
அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகை கெளதமி கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் துயர சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறோம்.
அதன் மூலம் உண்மைத் தன்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். இதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி
கெளதமி தகவல்
அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,
“அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கண்டிப்பாக தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சராக வருவார். தமிழ்நாட்டை நல்ல திசையில் கொண்டு செல்வார்” என்றார்.