செலவு செய்ய சொல்லி டார்ச்சர் - திமுகவுக்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர்!
தவெக ஒன்றிய செயலாளர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
தவெகவில் விலகல்
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது.
தவெகவில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டன. தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளையும் நியமித்து கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில், தவெகவில் இருந்து நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை, திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகபர்தீன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
இதனையடுத்து பொருளாதாரத்தில் நலிவடைந்த இளைஞர்களுக்கு பொறுப்பு தருகிறோம் என கூறி நலத்திட்டங்கள் வழங்குவதற்கு எங்களை சொந்தமாக செலவு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த நிர்வாகிகளை புறக்கணிப்பதாகவும் ஜெகபர்தீன் குற்றம்சாட்டியுள்ளார்.