10வது முறையாக செங்கோட்டையன் வெற்றி

Thamizhaga Vetri Kazhagam K. A. Sengottaiyan Tamil Nadu Election 2026
By Karthikraja May 04, 2026 09:47 AM GMT
Report

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 107 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

திமுக 70 தொகுதிகளிலும், அதிமுக 57 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். சில தொகுதிகளில் ஏறத்தாழ வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

செங்கோட்டையன் வெற்றி

தஞ்சாவூர், மதுரை தெற்கு, தாம்பரம் கோபிசெட்டிபாளையம் மற்றும் தூத்துக்குடியில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10வது முறையாக செங்கோட்டையன் வெற்றி | Tvk Sengottaiyan Record Won In Gobichettipalayam

கோபிசெட்டிபாளையத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம், செங்கோட்டையன் 10வது முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் 9வது முறையாக வெற்றி பெறுகிறார்.

1980 முதல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வந்த செங்கோட்டையன் 1996 தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம், தமிழ்நாட்டில் ஒரே தொகுதியில் அதிக முறை எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றுள்ளார்.  

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026