எடப்பாடி பேச்சு நகைப்புக்குரியது- “இரவல் ஆட்சி” விமர்சனத்திற்கு தவெக பதிலடி

Tamil nadu Edappadi K. Palaniswami TVK
By Vinoja Jul 14, 2026 02:26 PM GMT
Report

திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது” என எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு தவெக பதில் கொடுத்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

எடப்பாடி பேச்சு நகைப்புக்குரியது- “இரவல் ஆட்சி” விமர்சனத்திற்கு தவெக பதிலடி | Tvk Replay To Admk Edappadi Palanisamy

அதிமுக – திமுகவை “கூட்டு களவாணிகள்” என விஜய் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், ஆட்சியை நடத்துவதற்காக பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதாக தவெக மீது குற்றம்சாட்டினார்.

மேலும், “தனி பெரும்பான்மை இல்லாமல் வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை நம்பி ஆட்சி நடத்துவதாக” விஜயை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக கூறப்படுவது கட்டுக்கதை என்றும் தெரிவித்தார்.திமுகவை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அதிமுக தொடர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

தவெக பதிலடி 

எடப்பாடி பேச்சு நகைப்புக்குரியது- “இரவல் ஆட்சி” விமர்சனத்திற்கு தவெக பதிலடி | Tvk Replay To Admk Edappadi Palanisamy

இதற்கு பதிலளிக்கும் வகையில் தவெக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

“கட்சி நடக்கிறதா, கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது.

திமுகவுடன் சேர்ந்து கூட்டுக் களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர், மக்களாட்சியை ‘இரவல் ஆட்சி’ என விமர்சிப்பது அடக்க முடியாத சிரிப்பையே வரவழைக்கிறது” என தெரிவித்துள்ளது.