கூட்டணிக்கு தவெக தயார்! பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர்

Indian National Congress Thamizhaga Vetri Kazhagam
By Fathima Feb 25, 2026 08:29 AM GMT
Report

காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராக இருக்கிறது என்று தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதிப்பங்கீடு குறித்த பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது திமுக.

காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு இதுவரையிலும் விடையில்லை.

கூட்டணிக்கு தவெக தயார்! பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர் | Tvk Ready To Alliance With Congress

நேற்று முன்தினம் சென்னை வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதி விபரங்கள் குறித்த கடிதத்தை வழங்கியதாக தெரிகிறது.

காங்கிரஸ் தரப்பில் 27 சட்டப்பேரவை தொகுதிகளும், மாநிலங்களவை எம்பி பதவியும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து காங்கிரஸ் அகில இந்திய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறப்படுகிறது.

NDA கூட்டணி தொகுதி பங்கீடு: பாஜக-வுடன் பேச்சுவார்த்தை!

NDA கூட்டணி தொகுதி பங்கீடு: பாஜக-வுடன் பேச்சுவார்த்தை!


இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராகவுள்ளது, எங்களை அங்கீகரித்துள்ளனர், காங்கிரஸ் எல்லாவற்றுக்கும் தயார்.

அரசியலில் நீங்கள் அனைவருடனும் பேசவேண்டும், எந்த கட்சி தான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது? நாங்கள் கட்சி நடத்துகிறோம், NGO அல்ல, கூடுதல் தொகுதிகளை கேட்பது தான் காங்கிரஸ் இலக்கு.

ராகுல்காந்திக்கு காங்கிரஸில் அமோக செல்வாக்கு உள்ளது, 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்குவங்கி உள்ளது. கடுமையான எதிரிகள்கூட தொடர்பு கொள்கிறார்கள்.

அதிமுக தலைவர்களை சந்திக்கும்போதுகூட ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்வோம் என தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்கு தவெக தயார்! பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர் | Tvk Ready To Alliance With Congress