பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வு ரத்தான நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் இன்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

நேற்று காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது, இடதுசாரிகள்(4) மற்றும் விடுதலை சிறுத்தைகள்(2) ஆதரவு பெற தவெக கடிதம் எழுதியுள்ளது.
ஆளுநரிடம் கடிதம் அளித்த நிலையில், இன்னும் அவர் அழைப்பு விடுக்காததால் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.