வெற்றி பெறும் வேட்பாளர்கள் ரிசார்டில்? தவெக பிளான்
இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் தனது கட்சி எம்எல்ஏ-க்களை ரிசார்ட்டில் தங்க வைக்க தவெக ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 233 தொகுதிகளிலும் தவெக தனித்து களம் கண்டது.
எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளர் மாயமானதால், சுயேட்சை வேட்பாளர்க்கு ஆதரவு அளித்தார் விஜய்.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுக-வுக்கு சாதகமாக இருப்பதால் வெற்றி பெறும் தனது கட்சி எம்எல்ஏ-க்களை பத்திரமாக பாதுகாக்க தவெக முடிவு செய்துள்ளதாம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், வெற்றி பெற்றதும் பனையூர் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதன்படி பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வெற்றி பெறும் வேட்பாளர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் நம்புவதாகவும், ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில் தங்களது வேட்பாளர்களை குதிரை பேரம் நடத்தி இழுக்க திட்டமிடலாம் என்பதால் குறித்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.