கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள்விக்னேஷ் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்
Kallakurichi MLA Arul Vignesh File Bail Plea: மாவட்ட ஆட்சியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வான அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் அருள்விக்னேஷ் எம்எல்ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலிசார் வழக்குபதிவு செய்தனர்.

இதன்படி கைது செய்யப்பட்ட அருள்விக்னேஷ் எம்எல்ஏ நீதிபதி பானுமதி தலைமையில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அருள்விக்னேஷ் எம்எல்ஏ ஜாமின் கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார், இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் டிசம்பர் 1ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.