தமிழக அரசில் ஒதுக்கப்படாத முக்கிய துறைகள் என்னென்ன?
TVK
By Fathima
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்த விபரங்கள் நேற்று வெளியானது.
தவெக ஆட்சியில் முதலமைச்சர் விஜய் உட்பட 10 பேருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கலாம், இன்னும் 25 பேருக்கு இடம்வழங்க வாய்ப்புள்ள நிலையில், காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று அமைச்சர்களுக்கு பல்வேறு துறைகள் ஒதுக்கப்பட்டாலும், வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, மீன்வளம், பால்வளம், அறநிலையத்துறை, உயர்கல்வி, ஆதிதிராவிடர் நலன், தொழிலாளர் நலன், மனிதவள வேளாண்மை போன்ற பல முக்கிய துறைகள் ஒதுக்கப்படாமல் உள்ளன.