தவெக தலைமையில் உருவான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Sep 09, 2026 01:21 PM GMT
Report

tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி

தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் இன்று மாலை சென்னை பனையூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

தவெக தலைமையில் உருவான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி | Tvk Led Secular Social Justice Victory Alliance

இந்நிலையில், தவெக தலைமையிலான இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டம்திற்கு பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்படும்.

கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார். புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.