இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக முன்னிலை

ADMK DMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 09, 2026 06:10 AM GMT
Report

tvk leads in dharapuram and madurantakam by election: இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தவெகவும் முன்னிலை வகிக்கிறது.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

அக்டோபர் 6 ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், 2 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

தவெக முன்னிலை

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலையில் இருந்த நிலையில், 8 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 21,034 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். 

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக முன்னிலை | Tvk Leads In Dharapuram Madurantakam By Election

அதிமுக வேட்பாளர் பானுமதி 19,730 வாக்குகளுடன் 2வது இடத்திலும், திமுக வேட்பாளர் சுகன்யா 17,898 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா1632 வாக்குகளுடன் 4வது இடத்திலும், சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் 402 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

மதுராந்தகத்தில் 7 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 30,104 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். 

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக முன்னிலை | Tvk Leads In Dharapuram Madurantakam By Election

திமுக வேட்பாளர் பரந்தாமன் 21,577 வாக்குகளுடன் 2வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 17,224 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் ஜானகி ராமன் 898 வாக்குகளுடன் 4வது இடத்திலும், சிபிஎம் வேட்பாளர் சுகந்தி617 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.