900 நாட்களை கடந்த போராட்டம்..பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய் - வெளியான தகவல்!
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வரும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பரந்தூர்
சென்னையை ஆசியாவிலேயே முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக மாற்றவும், 20,000 ரூபாய் மதிப்பீட்டில் பாரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி , காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 4 ஆயிரத்து 750 ஏக்கர் பகுதியில், சுமார் 12 கிராமங்களும் அம்மக்களின் வாழ்வாதார விளைநிலங்களும் உள்ளன.
விஜய்
ஆகவே திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது திட்டத்தை கைவிட வேண்டும் எனக் கடந்த 900 நாட்களுக்கு மேலாகக் கிராம மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வரும் மக்களை வரும் திங்கட்கிழமை விஜய் சந்திக்க உள்ளார்.
இதற்காகக் காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்ட நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் போராட்டக் குழுவை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து மும்மரமாக வருகின்றனர்.