முழங்காலிட்டபடி ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்த விஜய்!
திருச்சி வயர்லெஸ் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் ஜோசப் விஜய் முட்டி போட்டு நடந்துவந்து பிரார்த்தனை செய்துள்ளார்.குறித்த விடயம் தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதியின் வேட்பாளருமான நடிகர் விஜய், இன்று தனது இறுதிக்கட்டத் தேர்தல் பரப்புரைக்காக திருச்சி வந்தடைந்தார்.

உருக்கமான பிராத்தனை
திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய விஜய், அங்கிருந்து நேரடியாக விமான நிலைய வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்று பிராத்தனையில் ஈடுப்பட்டுள்ளார்.
ஆலயத்திற்குள் நுழைந்த அவர், மிகவும் பக்தியுடன் இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி, முழங்காலிட்டே (மண்டியிட்டு) பீடத்தை நோக்கி நகர்ந்து சென்று, மெழுகுவர்த்தி ஏற்றி, தான் போட்டியிடும் முதல் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைக்க வேண்டும் என நீண்ட நேரம் மண்டியிட்ட நிலையில் உருக்கமாகப் பிரார்த்தனை செய்துள்ள்ளர். குறித்த காட்சிகள் தற்போது தொண்டர்களிடைய பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.