திமுக ஆட்சி தனித்துப் போட்டியிடுமா? தவெக அருண்ராஜ் கேள்வி

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Manchu Feb 12, 2026 03:02 AM GMT
Report

சட்டப்பேரவை தேர்தலில் திமுக எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிடுமா என தவெக கொள்ளை பரப்பு பொதுச்செயலர் கே.ஜி.அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.

பிரச்சாரம் மட்டுமின்றி பொதுக்கூட்டம் என வைத்து மக்களின் ஆதாரவை பெற்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு தமிழக தேர்தல் அதிக சூடுபிடித்துள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தனது கட்சிகளுக்காக அதிகமான வேலை செய்து வரும் நிலையில், தவெக கட்சியின் கொள்ளை பரப்பு பொது செயலர் கே.ஜி.அருண்ராஜ் சவால் விடுத்துள்ளார்.

திமுக ஆட்சி தனித்துப் போட்டியிடுமா? தவெக அருண்ராஜ் கேள்வி | Tvk Leader Arunraj Seat Sharing Issues Dmk

விஜய்யின் முன்னாள் மேனேஜருக்கு முக்கிய பதவி கொடுத்த திமுக

விஜய்யின் முன்னாள் மேனேஜருக்கு முக்கிய பதவி கொடுத்த திமுக

திமுக தனித்து போட்டியிடுமா?

சென்னையில் செய்தியாளர்களிடம் அருண்ராஜ் பேசுகையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் எப்படி இருக்கின்றது என்று கூறினார்.

அதாவது முதல்வர் ஸ்டாலில் தனது இருக்கையில் இருக்கும் நாற்காலியின் ஒரு கால் மட்டும் தான் திமுக உடையது என்றும் மற்ற 3 கால்கள் கூட்டணி கட்சிகளுடையது என்றார்.

மேலும் கூட்டணி கட்சிகளுக்கு சரியான அதிகார பகிர்வு அளிக்காமல், வெறும் வாக்கு வங்கியாகவே மட்டும் அவர்களை பயன்படுத்தி வரும் திமுக கட்சி எவ்வாறு சமூக நீதியை பாதுகாக்கின்றது என்று கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சி தனித்துப் போட்டியிடுமா? தவெக அருண்ராஜ் கேள்வி | Tvk Leader Arunraj Seat Sharing Issues Dmk

அண்ணாமலை பற்றிய கேள்விக்கு சிரித்தபடி பதில் சொன்ன கனிமொழி

அண்ணாமலை பற்றிய கேள்விக்கு சிரித்தபடி பதில் சொன்ன கனிமொழி

ஆட்சியில் அவ்வாறு பங்கு கொடுக்க முடியாது என்றால் தனித்து போட்டியிடுவோம் என்று கூறுங்கள்... திமுக-விற்கு வாரா வாரம் பொதுக்கூட்டம் அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகின்றது, ஜனநாயக நாட்டில் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் சமவாய்ப்பு இருக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முக்கியமான விதியே சம உரிமைதான். உண்மையில் பாசிசம் கட்சி என்று கூறினால் அது திமுக-வாக தான் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.  

திமுக ஆட்சி தனித்துப் போட்டியிடுமா? தவெக அருண்ராஜ் கேள்வி | Tvk Leader Arunraj Seat Sharing Issues Dmk