தவெக பிரமுகரை வெட்டி கொன்றது ஏன்? கைதான மாணவன் பரபரப்பு வாக்குமூலம்
சென்னையில் கொலை செய்யப்பட்ட தவெக பிரமுகர் கண்ணனை கொன்றது ஏன் என குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 45), தவெக பிரமுகராக இருக்கிறார்.
ஐடி நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலிசார் அடையாறு பகுதியை சேர்ந்த பரணி(வயது 20) மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், முன்பகையை கண்ணனின் கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு பரணியின் பெரியப்பாவை கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர், தொடர்ந்து 2016ம் ஆண்டு பரணியின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு காரணமாக கண்ணனை நேரம் பார்த்து பழிவாங்க காத்திருந்ததாக பரணி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தங்களது வீட்டுக்கு வந்த கண்ணன் தனக்கு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் பகையை மறந்து சமாதானமாக போலாம் என கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்த கண்ணன், அப்பகுதியில் முக்கிய புள்ளியாக வலம்வந்ததால் ஆத்திரமடைந்த பரணி, மீண்டும் ஆபத்து வரலாம் என்ற எண்ணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.