NDA கூட்டணியில் தவெக? பாஜக அழைப்பு

BJP Thamizhaga Vetri Kazhagam
By Fathima Mar 08, 2026 08:41 AM GMT
Report

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைய அழைப்பு விடுத்துள்ளார் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக உட்பட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

NDA கூட்டணியில் தவெக? பாஜக அழைப்பு | Tvk Joins Nda Alliance

கூட்டணி கட்சிகள் ஏதும் இல்லாததால் தனித்து களமிறங்கும் தவெக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக-வை எதிர்க்கும் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும்.

திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் லட்சியம் என்றால் தவெக எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும்.

அவருக்கான இடத்தை தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வழங்கும், NDA வில் இணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம், ஏனெனில் தேர்தல் முடிந்தபின்னர் விஜய் கட்சியே நடத்த முடியாத சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.