விஜய்க்கு சால்வை.. என்னை சுட்டிருந்தாலும் பரவாயில்லை - சிக்கிய நபர் மகிழ்ச்சி

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Sumathi May 06, 2025 04:27 AM GMT
Report

விஜய்க்கு சால்வை போர்த்த முயற்சி செய்த நபர் பேட்டியளித்துள்ளார்.

துப்பாக்கியால் சர்ச்சை

தவெக தலைவரும், நடிகருமான விஜய், கொடைக்கானலில் 5 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

madurai

முன்னதாக விஜய் மதுரை விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல முயன்றபோது திடீரென்று ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி விஜய் அருகே செல்ல முயன்றார். இதனைப் பார்த்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கியை எடுத்து அந்த ரசிகரின் தலையில் வைத்து விசாரித்தனர்.

விஜய்யை கட்டின மனைவியுடன் வெளியே வர சொல்லுங்க.. ஏன் ஆடம்பரம் - தாக்கிய பிரபலம்

விஜய்யை கட்டின மனைவியுடன் வெளியே வர சொல்லுங்க.. ஏன் ஆடம்பரம் - தாக்கிய பிரபலம்

இன்பராஜ் பேட்டி

அதில், அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் இன்பராஜ் என தெரியவந்துள்ளது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தற்போது இன்பராஜ் அளித்துள்ள பேட்டியில்,

விஜய்க்கு சால்வை.. என்னை சுட்டிருந்தாலும் பரவாயில்லை - சிக்கிய நபர் மகிழ்ச்சி | Tvk Inbaraj About Vijays Protection

”தலையில் துப்பாக்கி வைத்தது எதார்த்தமாக நடந்தது, தலைவர் பாதுகாப்பிற்காக செய்து இருப்பார்கள். அதில் தவறு கிடையாது. இதை நான் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்கிறேன். சிஆர்எப் போலீஸ் என் தலையில் துப்பாக்கி வைத்தது, எனக்கு அப்போது தெரியாது. தொலைக்காட்சியில் என்னுடைய நண்பர்கள் பார்த்து சொன்ன பிறகுதான் எனக்கே தெரியும்.

தலைவன் பாதுகாப்பிற்காக நாங்கள் தான் செல்வோம், கையில் தான் மக்களை தடுப்போம். இப்போது துப்பாக்கியை வைத்து எங்கள் அண்ணனை பாதுகாப்பாக கொண்டு செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.