முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று முதல் அமைச்சரவை கூட்டம்
Vijay
Thamizhaga Vetri Kazhagam
TVK
By Yashini
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அரசின் நிர்வாகம் மற்றும் கொள்கை தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்த ஆலோசனைக்கு பிறகு, மாநிலத்தின் முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.