எதிர்ப்புக்கு பணிந்த முதல்வர் விஜய் - ஜோதிடரின் அரசு பணி நியமனம் ரத்து

Vijay
By Karthikraja May 13, 2026 08:49 AM GMT
Report

விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசு பணி நியமனத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜோதிடரின் அரசு பணிக்கு எதிர்ப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நேற்று நியமிக்கப்பட்டார். 

எதிர்ப்புக்கு பணிந்த முதல்வர் விஜய் - ஜோதிடரின் அரசு பணி நியமனம் ரத்து | Tvk Govt Revoke Radhan Osd Pandit Post

ஜோதிடத்தில் சுமார் 40 ஆண்டு கால அனுபவம் உள்ள இவர், விஜய் கட்சி தொடங்கியது முதல் அவருக்கு ஆன்மீக ரீதியாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும், அதன்படியே விஜய் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர்களுக்கே இன்னும் இலாகா ஒதுக்கப்படாத நிலையில், தனது ஜோதிடருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டதற்கு விசிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

முதல்வர் வீட்டிற்கு முகத்தை மூடி வந்தது யார்? விஜய்க்கு நேராக பிரேமலதா கேள்வி

முதல்வர் வீட்டிற்கு முகத்தை மூடி வந்தது யார்? விஜய்க்கு நேராக பிரேமலதா கேள்வி

மேலும், இன்று சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், உங்களுக்கு ராஜகுருவாக இருந்தால் அதை பெர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள். அவரை அரசு உயர்பதவியில் நியமித்ததன் மூலம் நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். 

எதிர்ப்புக்கு பணிந்த முதல்வர் விஜய் - ஜோதிடரின் அரசு பணி நியமனம் ரத்து | Tvk Govt Revoke Radhan Osd Pandit Post

மேலும், விசிக எம்எல்ஏ வன்னியரசு, "ஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைளுக்கு அரசு முன்னுரிமை தரக்கூடாது. மூட நம்பிக்கைளுக்கு எதிரான சட்டத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய முதலமைச்சர் விஜய், இது குறித்து மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்தார். 

எதிர்ப்புக்கு பணிந்த முதல்வர் விஜய் - ஜோதிடரின் அரசு பணி நியமனம் ரத்து | Tvk Govt Revoke Radhan Osd Pandit Post

அதைத்தொடர்ந்து, ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசு பணி நியமனத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு

ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசு பணி நியமனத்தை ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பணிநியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது. 

விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஜோதிடர் திரு. ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அவர்களின் நியமனத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். 

வரும் காலங்களில் மாணவர்கள்,இளைஞர்கள் உள்ளிட்ட எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் அமையும் என்று நம்புகிறேன்.

போகவேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைக்கப்பட வேண்டும்.எதிர்க்கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் முதலமைச்சரின் பண்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என தெரிவித்துள்ளார்.