தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல்
தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள தமிழக வெற்றி கழகம் 2026- 27ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
நிதித்துறை அமைச்சரான மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார், இதன் போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
பெண்கள், மாணவிகளை ஈர்க்கும் வண்ணம் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய், மாணவர்களுக்கு உதவித்தொகையாக 8000 ரூபாய் வழங்குவது குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம்.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் விவசாய நலத்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
